• கடந்த  5-ஆம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 
    திரு.கதிர் ஆனந்த் அவர்கள் வெற்றி பெற்றுள்ளமைக்கு எனது வாழ்த்துக்களையும் 
     பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர்களும்  நிர்வாகிகளும் 
    திரு. கதிர் ஆனந்த் அவர்களுக்கான தேர்தல் பணிகளில் கலந்துகொண்டு,இவ்வெற்றிக்கு பாடுபட்டனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

    தமிழகத்தின் உரிமைகளுக்காக மக்களைவையில் ஏற்கனவே ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் திமுக  தோழமைக் கட்சியினரோடு திரு.கதிர் ஆனந்த் அவர்களின் குரலும் ஓங்கி ஒலிக்கும் என்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.