• “சமுதாயம் போற்றும் உன்னத வாழ்வினைப் பெற செய்தொழிலை மதித்து போற்றுவோம்” - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து ஆயுதபூஜை வாழ்த்து

    நவராத்தியின்  9 நாட்களும் விரதமிருந்து,  தூய்மையான உள்ளத்துடனும் –பக்தியுடனும்,  கல்விக்குரிய சரஸ்வதியையும்,  செல்வத்திற்குரிய லட்சுமி தேவியையும்,  வீரத்திற்குரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கினால்பத்தாம் நாளான தசமி அன்று முப்பெரும் தேவியரும் ஒவ்வொருவரின் இல்லம் தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.

      அறிவை தரும் கல்வி நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாகமாகும். அக்கல்வியறிவின் மூலம்,  நாம் செய்யும் தொழில் நம்மை வாழவைக்கும் என்பதனை அவரவர் உணர,  “செய்யும் தொழிலே தெய்வம்”  எனக்கூறி கொண்டாடுவது ஆயுத பூஜையாகும்.  சமுதாயம் போற்றும் உன்னத வாழ்வினைப் பெற செய்தொழிலை மதிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏற்றம் பெற, கல்வி – செல்வம் – ஆற்றல் ஆகியவை இன்றியமையாததாகும்.  

     

    இத்தத்துவங்களை நாமும் வாழ்வில் கடைபிடித்தால்,  நாம் அனைவரும்  உன்னத வாழ்வினை  பெற முடியம் எனக்கூறி,  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்நவராத்திரி விழாவினைக் கொண்டாடும் அனைவருக்கும் என் உளம் கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)