• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும்- மிலாது நபி வாழ்த்துச்செய்தி

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைதூதர் என இஸ்லாமிய பெருமக்களால் நம்பப்படுகின்றது.  தான் வாழ்ந்த காலத்தில் அனைத்து நற்குணங்களின் முழுவடிவமாக திகழ்ந்தவர்  அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள். மனித நேயத்தையும் – வாழும் பண்பாட்டையும் உலகிற்கு போதித்ததோடு நின்றுவிடாமல், தன்  வாழ்நாள் முழுதும் அப்போதனைகளை பின்பற்றி வாழ்ந்து காட்டியவர்.

  மேலும், எளியோர்களிடம் கருணை – அன்பு – அமைதி – சமுதாய நல்லிணக்கம் – சகோதரத்துவம் – ஈகை இவை அனைத்தையும் ஒவ்வொருவர் வாழ்விலும் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

  நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் – உலகில் அமைதி, சகிப்புத்தன்மை நிலவிடவும், நம் நாட்டில் தீவிரவாதம் – மதவாதம் – சாதியவாதம் போன்றவை ஒழிந்து, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மனித நேயமிக்க இந்தியாவை உருவாக்க பாடுபடவேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர், M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி