• தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழாக்களை பேணிக் காக்கவேண்டும்- டாக்டர்பாரிவேந்தர் பொங்கல் திருநாள் வாழ்த்து

  தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுத்  

  திருவிழாக்களை பேணிக் காக்கவேண்டும்

  -    டாக்டர் பாரிவேந்தர் பொங்கல்  திருநாள் வாழ்த்து  -

   

   

  தைத்திங்கள் முதல்நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளாகும். உழைக்கும் மக்கள், இயற்கைக்கும் – மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக இப்பொங்கல் திருநாள் அமைகின்றது.

   

  நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இப்பொங்கல் விழாவின் முதல்நாளான போகியன்று, மழைக்கு உறுதுணையாக விளங்கும் இந்திரனுக்கும், இரண்டாம் நாளன்று விளைச்சலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரியனுக்கும், மூன்றாம் நாளன்று உழவுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் மரியாதை செய்வதுடன், நான்காம் நாளன்று தங்கள் உற்றார் - உறவினர்களை சந்தித்து அன்பைப் பகிர்ந்துகொள்ளும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

   

  இப்பொங்கல் பண்டிகையுடன், மேலும் பல பாரம்பரியத் திருவிழாக்களையும் நாம் பேணிக்காக்க வேண்டுமெனக் கூறி, தமிழர்கள் அனைவருக்கும் - குறிப்பாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி