• இந்திய ஜனநாயகக்கட்சியின் சார்பில் “பாரிவேந்தரின் பாரம்பரியபொங்கல் திருவிழா” கலைநிகழ்ச்சிகளுடன்கொண்டாடப்பட்டது.

  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில்

  “பாரிவேந்தரின் பாரம்பரிய பொங்கல் திருவிழா”

  கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

   

  சென்னை வடபழனியில் உள்ள் சிம்ஸ் (SIMS) மருத்துவமனை வளாகத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் “பாரிவேந்தரின் பாரம்பரிய பொங்கல் திருவிழா” நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 101 வகையான அரிசிகளைக் கொண்டு, 101 பொங்கல் பானைகளில்  பொங்கல் வைக்கப்பட்டது. மாவிலைத் தோரணம் – வாழை – கரும்பு – தென்னங்குலைகள் ஆகியவை வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்திய ஜனநாயகக் கட்சியின் சென்னை, செங்கலபட்டு மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் அணியினர் 101 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

  முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, மெல்லிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகளிர் பெருமளவில் கலந்துகொண்ட கோலப்போட்டியும் நடைபெற்றது. பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், ஐஜேகே தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்தனர்.

  பொங்கலிட்ட 101 மகளிருக்கும், கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கும் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி, அவர்கள், பரிசுப்பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் திரு.எம்.ரவிபாபு அவர்கள் ஏற்பாடு செய்து, முன்நின்று நடத்தினார். நிகழ்ச்சியில் ஐஜேகே பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் திரு.எம்.எஸ்.ராஜேந்திரன், விளம்பரப்பிரிவு செயலாளர் திரு.எஸ்,முத்தமிழ்செல்வன் மற்றும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் மகளிரணி பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

  இங்ஙனம்,

  கட்சித் தலைமையம்

   இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)