• பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் இந்திய பாதுகாப்புத்துறைநிலைக்குழு உறுப்பினராக நியமனம்.

    பெரம்பலூர் தொகுதி  நாடாளுமன்ற  உறுப்பினரும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமாகிய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்,  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் திறமையான செயல்பாட்டினைக் கருத்தில்கொண்டு, இவ்வாண்டு இந்திய பாதுகாப்புத்துறையின் நிலைக்குழு உறுப்பினராக (Parliamentary Standing Committee on Defence) மத்திய அரசு  நியமித்துள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.