• டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்கள் விடுத்திருக்கும் - ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியினை, ஒவ்வொரு ஆண்டும் ‘ஆசிரியர் தின’மாகக் கொண்டாடி வருகின்றோம். கல்வி – அறிவு – பண்பு – ஒழுக்கம் ஆகியவற்றை இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு போதித்து, எதிர்கால சமுதாயத்தில் நல்ல குடிமக்களாக விளங்கச் செய்ய, ஆசிரியர்கள் ஆற்றும் பணி என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அத்தகு சிறப்பு வாய்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.