• “பார் போற்றவும் – ஊர் போற்றவும் தமிழர்கள்சிறப்புடன் வாழவேண்டும்” - IJK தலைவர்ரவிபச்சமுத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து

    தமிழ் புத்தாண்டு வரிசையில் விகாரி ஆண்டு முடிந்து, சார்வரி ஆண்டு நாளை தொடங்குகிறது. பண்பாட்டு – கலாச்சார அடிப்படையில் நீண்ட மரபும், வரலாறும் கொண்டவர்கள் தமிழர்கள். நமது முன்னோர்களின் பாரம்பரியங்களை தொடர்ந்து பேணிக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

    ‘தமிழர் என்றோர் இனம் உண்டு – தனியே அவர்க்கோர் குணம் உண்டு’ என்கிற கருத்தின் அடிப்படையில் நம் வாழ்வியல் முறையை அமைத்துக்கொண்டு, பார்போற்றவும் – ஊர்போற்றவும் தமிழர்கள் சிறப்புடன் வாழவேண்டும் எனக்கூறி, நாளை பிறக்க உள்ள தமிழ் புத்தாண்டிற்கு என் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.