• “சாமானிய மக்களின் குரலாக ஒலித்தவர் நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள்”நீதியரசர் எஸ். மோகன் அவர்களின் மறைவிற்கு- டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்

    தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த நீதிபதிகளில் ஒருவராக விளங்கி, தமிழகத்தின் சட்டத்துறைக்கு மாபெரும் பெருமையைத் தேடித்தந்தவர் மறைந்த நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள்.

    சட்ட நிபுணராக மாத்திரம் அல்லாமல், சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர் நீதியரசர் மோகன் அவர்கள். பல்வேறு வழக்குகளில் தமிழையும் - ஆங்கிலத்தையும் கையாண்டு,  தீர்ப்புகளை எழுதிய முறை மிகச்சிறந்த இலக்கியவாதியாக அவரை முன்னிலைப்படுத்தியது. 

    தமிழக அரசின் வழக்கறிஞராகவும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் - உச்சநீதிமன்ற நீதியரசராகவும் பொறுப்புகளை வகித்த காலத்தில்,  சாதாரண – சாமானிய மக்களின் குரலாக நீதிமன்றங்களில் ஒலித்தவர்.

    அவரின் மறைவு தமிழகத்திற்கும் - தமிழ் உணர்வாளர்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், அவர் மீது பற்றுகொண்டவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.