• விண்வெளி அறிவியலில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா பயணிக்கின்றது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P வாழ்த்து

    நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில்,சந்திராயன் – 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான “இஸ்ரோ”வடிவமைத்து, இன்று (22.07.2019) மதியம் சரியாக 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின்ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ள சந்திராயன்-2 விண்கலம், இந்திய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

    விண்வெளி அறிவியலில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா பயணிக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இச்சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டிய ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கள்கின்றேன்.