• உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடவேண்டும். - டாக்டர் பாரிவேந்தர் MP வலியுறுத்தல் - அறிக்கை விவரம்

    உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் உடனடியாக அதன் இணையதளத்தில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம். இனிமேல் ஆங்கிலத்துடன் இந்தி, அஸ்ஸாமி, கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில மொழிகளிலும் தீர்ப்புகள் மொழியாக்கம் செய்யப்படுவதை வரவேற்கின்றேன்.

    அதே வேளையில், உலகின் மிகவும் தொன்மைவாய்ந்ததும், பத்துகோடிக்கும் அதிகமான மக்கள் பேசக்கூடியதுமாகிய தமிழ் மொழி இப்பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. உச்சநீதிமன்றம் உடனடியாக இதனை கருத்தில்கொண்டு, மொழி மாற்றப்பட்டியலில் தமிழ் மொழியையும் இணைக்கவேண்டும். மேலும்,  மத்திய சட்ட அமைச்சகமும் இதுகுறித்த பரிந்துரையை உச்சநீதிமன்றத்திற்கு வழங்கவேண்டும் எனவும், உடனடியாக திருத்தப்பட்டியல் வெளியிட்டு, அதில் தமிழ் மொழியையும் இணைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.