உலகின் தொன்மையான பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். செய்யும் தொழிலைக்கொண்டு மக்கள் நான்கு வகையினராக பிரிக்கப்பட்டிருந்தனர் என்பதனை தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. அந்தனர்- அரசர் – வணிகர் - வேளாளர் ஆகிய நான்கு இனங்களுக்குரிய உரிமைகள் மற்றும் தொழில்கள் பற்றிய வரையறைகளும்,சாதிகளின் அடிப்படையில் அல்லாமல் தொழில்களின் அடிப்படையிலேயே இனம் பிரிக்கப்பட்டிருந்தன.
இந்த அளவிற்கு கலை, பண்பாடு, அரசு நிர்வாகம், உலக அளவிலான வணிகம், வான சாத்திரம், கட்டுமான நுண்ணறிவு என அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள்.
அத்தகு சிறப்பு வாய்ந்த தமிழர்களின் தமிழ் புத்தாண்டு, நாளை (14/04/19)பிறக்கவிருக்கின்றது. இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies