-
தொழில்வளம் பெருக தொழிலாளார் நலன் காக்கப்பட வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் ‘மே தின’ வாழ்த்து –
‘உழைப்போரே உலகின் அச்சாணி’ எனும் கூற்றுக்கு ஒப்ப, தொழிலாளர்கள்தான் ஒரு நாட்டின் தொழில்வளத்திற்கு ஆதாரமாய் இருப்பவர்கள். எட்டு மணி நேர வேலை வேண்டி, 1886 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணியே மேதினத்தின் காரணியாய் விளங்குகின்றது.
உழைப்பிற்கேற்ற ஊதியம், நேரத்திற்குட்பட்ட உழைப்பு என்பதே தொழிலாளர்களின் ஆதார உரிமையாகும். அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் தொழில் சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு தொழிலாளர் நலன் காக்கப்பட்டால் மாத்திரமே, நாட்டில் தொழில்வளம் பெருகும். உலக வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் இத்தருவாயில், தொழிலாளர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.