-
பொங்கல் போன்ற பாரம்பரிய பண்டிகைகளை பேணிக்காக்க வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் பொங்கல் பண்டிகை வாழ்த்து -
தைத்திங்கள் முதல்நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவான பொங்கல் பண்டிகையாகும். உழைக்கும் மக்கள், இயற்கைக்கும் – மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக இந்த பொங்கல் அமைகின்றது.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இப்பொங்கல் விழாவின் முதல்நாளான போகியன்று,மழைக்கு உறுதுணையாக விளங்கும் இந்திரனுக்கும், இரண்டாம் நாளன்று விளைச்சலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரியனுக்கும், மூன்றாம் நாளன்று உழவுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும், மரியாதை செய்யப்படுவதுடன், நான்காம் நாளன்று மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை சந்தித்து அன்பையும் – உணவுப் பண்டங்களையும் பகிர்ந்துகொண்டு பொங்கல் பண்டிகைகளைச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இப்பொங்கல் பண்டிகை மூலம் பாரம்பரியம் – பண்பாட்டு சிறப்புகளை நாம் பேணிக்காக்க வேண்டுமெனக் கூறி, தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.