• ‘மேலான அறிவையும் – தளராத மனதையும் பெற ஞானமுதல்வனை நம்பிக்கையுடன் வழிபடுவோம்’ ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி –

    ஞானமுதல்வனாகிய விநாயகர் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடி வருகின்றோம். கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர், விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம் என்கிற நம்பிக்கை தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. அவ்வகையில் இந்த வருடம் நாளை (18.09.2023)  விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டவுள்ளோம்.

     

    நல்லனவற்றை நினைப்பது - நல்லனவற்றை செய்வது ஆகியவையே இன்றைய உலகில் மிக தேவையான ஒன்றாகும். எதிர்மறை சிந்தனைகள் ஒழிந்து – நேர்மறை எண்ணங்கள் வளர விநாயகரை வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள் இதனால் சமூக உறவுகளும் – குடும்ப உறவுகளும் நிலைத்து நிற்கும். தெளிந்த அறிவும் – நற்சிந்தணையும் கொண்ட மாணவர் சமுதாயம் உருவாக வேண்டும். அதனை நாம் பெற மேலான அறிவையும் – தளராத மனதையும் தரவேண்டுமென, விநாயகரை வணங்கி, அவரை வழிபடும் அனைத்து மக்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.