• அர்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்களே நம் சமுதாயத்தின் அறிவுத்தூண்கள் -ஆசிரியர் தினத்திற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P. வாழ்த்து

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 05-ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் 'ஆசிரியர் தின' மாக கொண்டாடி வருகின்றோம்.

    தொடக்கக்கல்வி – உயர்நிலைக்கல்வி - மேனிலைக்கல்வி மற்றும் கல்லூரி படிப்புகள் என எதுவாக இருந்தாலும், நல்ல ஆசிரியர்களால் மட்டுமே கற்பிக்கும் திறனுடன் மாணவர்களின்  அறிவாற்றலை மேன்மை படுத்த முடியும். அவ்வகையில், அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர் பெருமக்களே நம் சமுதாயத்தின் அறிவுத்தூண்களாக விளங்குகிறார்கள். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு என் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.