• பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? - IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்

    பொள்ளாச்சியில் சில இளம்பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை பற்றிய செய்திகள் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. நியாய உணர்ச்சியும்பெண்கள்பால் மதிப்பும் உள்ள நாகரீக சமுதாயம் இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆட்சி அதிகாரம் மற்றும் பணத்தின் கொடுங்கரங்கள் எத்தனை தூரம் நீளும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாகும்.

    ஒரு குற்றச் சம்பவத்தில் ஆளும் தரபினர் மீது புகார் எழுந்தால்ஐயத்திற்கிடமின்றி விசாரனை நடத்த ஒத்துழைக்க வேண்டும். நீதி வழங்குவது மட்டுமின்றி – வழங்கப்பட்ட நீதி சந்தேகத்திற்கிடமின்றியும் அமைந்திடல் வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு காவல்துறை மீதும் – ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

    ஆனால்பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் அனைத்தும் நேர்மாறாக உள்ளது. பாதிக்கப்பட்ட பல பெண்களும் காவல்துறையை அணுக முடியாத அளவிற்கு மிரட்டப்படுவதாக தெரிகின்றது.  இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு,  அடக்குமுறையை ஏவுகின்றனர். அவ்வகையில்நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு.கோபால் அவர்களின் மீதும்திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மருமகன் திரு.சபரீசன் அவர்களின் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

    சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ள இவ்வழக்கில் ஆளுங்கட்சியினரின் தலையீடும்நிர்பந்தமும் இருந்தால் பொதுமக்களின் கோப உணர்ச்சிக்கு அவர்கள் ஆளாகநேரிடும் என எச்சரிக்கின்றோம்.

    நேர்மையான முறையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டுகுற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவது ஒன்றே இதற்கான தீர்வாகும். எனவே நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி – ர்களின் மீது அடக்குமுறையை ஏவிவிடும் போக்கினை ஆட்சியாளர்கள் கைவிடவேண்டும். இல்லையெனில் இதற்காக கடுமையான பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.