• நாளை கரூர் மாவட்டம் குளித்தலையில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில், குளித்தலை நகரில், வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்,  நாளை (20.11.2018) காலை 10.00 மணிக்கு, மாவட்டத் தலைவர் 
    ஆர். பிரகாஷ்கண்ணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில்,

    Ø  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் வழங்க வேண்டும்

    Ø  கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் தட்டுப்படின்றி வழங்கவேண்டும்

    Ø  சாமான்ய மக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல் - டீசல் விலையை 
    GST- க்குள் கொண்டு வந்து உடனே குறைக்க வேண்டும்

    Ø  காவேரி – அரியாறு – வைகை – குண்டாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை

    உடனே நிறைவேற்ற வேண்டும்.

    Ø  குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாதாள சாக்கடை  அமைக்கவேண்டும்.

    Ø  குளித்தலை – மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும்.

    Ø  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குளித்தலை புறவழிச்சாலையை உடனடியாக திறந்துவிட வேண்டும்.

    என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் –பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.