• சமுதாயம் போற்றும் உன்னத வாழ்வினைப் பெற செய்தொழிலை மதிப்போம் - டாக்டர் பாரிவேந்தர் ஆயுதபூஜை வாழ்த்து

    நவராத்தியின்  நாளும் விரதமிருந்துதூய்மையான உள்ளத்துடனும் பக்தியுடனும்கல்விக்குரிய சரஸ்வதியையும்செல்வத்துக்குரிய லட்சுமி தேவியையும்வீரத்துக்குரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கினால், பத்தாம் நாளான தசமி அன்று முப்பெரும் தேவியரும் ஒவ்வொருவரின் இல்லம் தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.

     முப்பெரும் தேவியர்களை போற்றும்  9  நாட்களில் முதல்  நாட்கள் சக்தியையும்அடுத்த   நாட்கள் லட்சுமியையும், கடைசி  நாட்கள் சரஸ்வதியையும் பயபக்தியோடு மக்கள் வழிபடுவது வழக்கம்.

     நாம் செய்யும் தொழில் நம்மை வாழவைக்கும் என்பதனை அவரவர் உணர,  செய்யும் தொழிலே தெய்வம்” எனக்கூறி கொண்டாடுவது ஆயுத பூஜையாகும்.  சமுதாயம் போற்றும் உன்னத வாழ்வினைப் பெற செய்தொழிலை மதிக்க வேண்டும்.

    உள்ளத்தின் அழுக்குகளை முற்றிலுமாக நீக்கிசாமானியர்கள் முதல் சகலமும் படைத்தவர்கள் வரை, அனைவரின் வாழ்விலும் நன்நெறிமுறைகளை வகுத்துஒளிதீபம் ஏற்றுவது கல்விதான்”  என்பதனை உணர்த்தும் விதமாக,  சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது.

      இத்தத்துவங்களை நாமும் வாழ்வில் கடைபிடித்தால்நாம் அனைவரும்  உன்னத வாழ்வினை  பெற முடியம் எனக்கூறிஅனைவருக்கும் என் உளம் கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.