• தமிழர் உரிமைகளில் சமரசமில்லா போராளியாக திகழ்ந்தவர் நடராஜன் - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

    தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளார் என்கிற சிறிய கிராமத்தில் 1943-ம் ஆண்டு பிறந்த திரு.நடராஜன் அவர்கள், 1965-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் கலந்து கொண்டு பெரும் களப்பணியாற்றினார்.

    குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடினார். முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் தமிழர்கள் மீதான வதைகளை வெளிப்படுத்த ‘முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற பெயரில் ஒரு வளாகத்தை நிறுவினார்.

    பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய முதல்வர்களிடம் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்த திரு.நடராஜன், ‘புதிய பார்வை’ இலக்கிய இதழ் மூலம் நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். தமிழர் உரிமைகளில் சமரசமில்லா போராளியாக திகழ்ந்த திரு.நடராஜன் அவர்களின் மறைவு தமிழகத்திற்கு ஓர் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் -  அவரின் ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.