• வளமான – வலிமையான பாரதம் உருவாக தங்களின் நீண்டநாள் சேவையை நாடு எதிர்நோக்குகின்றது - பிரதமர் நரேந்திரமோடிக்கு டாக்டர் பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து

    நம் இந்திய தேசத்தின் தொன்மையான கம்பீரமாகவும் - புராதன வரலாற்றுச் செழுமையின் அடையாளமாகவும் திகழ்பவர் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள். உலக அரங்கில் இநதியாவின் பெருமையை உயர்த்தவும் - பொருளாதார ரீதியில் தற்சார்புடைய நாடாக வளரவும் அவர் ஆற்றும் பணிகள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

    கடந்த 14-ம் தேதி இந்தியாவின் மிக பிரமாண்டமான அதிவேக புல்லட் ரயில் போக்குவரத்திற்காக ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடியில் திட்டம் தீட்டி, அதனை ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் செயல்படுத்த, அந்நாட்டின் பிரதிமர் திரு. ஷின்சு அபே அவர்களை அழைத்து, அடிக்கல் நாட்டவைத்தார். மேலும், 138 மீட்டர் உயரம் கொண்ட ஆசியாவின் இரண்டாவது பெரிய அணைக்கட்டாக விளங்கும், நர்மதா அணையையும் தன் பிறந்தநாள் பரிசாக நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    இதேபோல் கல்வி - தொழில் - ஏற்றுமதி - கட்டுமானத்துறைகள் - இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என பல்வேறு துறைகள் மூலம், நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார் என்பதை மறுக்க முடியாது. வளமான - வலிமையான பாரதம் உருவாக, அவரின் நீண்ட நாள் சேவையை இந்தியத் திருநாடு எதிர்நோக்கியுள்ளது எனக்கூறி, நம் பாரதப் பிரதமருக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.