• கோவை பேருந்து நிலைய இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சோமனூரில் மழை காரணமாக, 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்து ஒட்டுனர் சிவக்குமார் என்பவர் உட்பட 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் சிக்கி மரணமடைந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள 10-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் வேண்டுகின்றேன்.

    மேலும், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் – காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.