• மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு -டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    கடந்த 3-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், கேபினெட் அமைச்சராக பொறுப்பேற்ற – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும் – நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்குப் பின், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள். அந்த வகையில் அவரின் ஆளுமைக்கு வழங்கப்பட்ட பரிசாகவே இதனை கருதலாம்.

    அதேபோல், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக சிறப்புடன் பணியாற்றிய மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தமிழகத்திற்குப் பெருமையாகும். இவர்களின் பணி மேலும் சிறக்கவும், எதிர் காலத்தில் பல்வேறு பெரும் பொறுப்புகளை ஏற்கவும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.