• தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் விலகல் - புதிய பொறுப்பாளர் அறிவிப்பு

    திரு.ராஜேஷ் (எ) மாரிமுத்து அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், தலைவர் உயர்திரு இளையவேந்தர் அவர்களும் அறிவுறித்தியுள்ளபடி, மேற்படி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பொறுப்பை தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளரும் – தஞ்சை மேற்கு மாவட்டத் தலைவருமான திரு.சிமியோன் சேவியர் ராஜ் அவர்கள் கூடுதலாக கவனிப்பார்.

    எனவே, மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை திரு.சிமியோன் சேவியர் ராஜ் அவர்களுடன் இணைந்து கட்சிப்பணியாற்றும்படி தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.