• அண்ணல் நபிகள் போதித்த நெறிமுறைகளை அனைவரும் கடைபிடித்து வாழ வேண்டும் - ரமலான் திருநாளை முன்னிட்டு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் – உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி – எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவுவது இறைவணக்கத்திற்கு நிகரானதாகும்

    அவ்வகையில்அண்ணல் நபிகள் நாயகம் உலக மக்களுக்கு போதித்த அன்பு – மனிதநேயம் – அமைதி சமாதானம் – நல்லொழுக்கம் பிறருக்கு உதவும் மாண்பு ஆகிய உயரிய நெறிமுறைகளை அனைவரும் ஏற்று – அதனை முழுமையாக கடைபிடித்து வாழ வேண்டும் எனக்கூறிஇஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.