• சென்னை வடபழனி தீவிபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்தினருக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து இரங்கல்

    சென்னை வடபழனி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (08.05.2017)  அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் மரணமடைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    தப்பித்துச் செல்ல வழியின்றி, புகை மூட்டத்தில் சிக்கி அந்த நான்கு பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மின்கசிவு ஏற்பட்டதாலேயே இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது. எனினும் விபத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிவதோடு, எதிர்காலத்தில் இது போன்ற மின்கசிவு விபத்துக்கள் ஏற்படாதிருக்க, தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

    படுகாயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஐந்து பேரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும், தீவிபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.