• தற்காலிக தடைகளெல்லாம் நீங்கி தமிழர்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் விரைவில் உருவாகும் - டாக்டர் பாரிவேந்தர் பொங்கல் திருநாள் வாழ்த்து

    உழவர்கள்தம் கடின உழைப்பால் விளைவித்த பொருட்களை இயற்கைக்கும்இறைவனுக்கும் படைத்து விட்டுதம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு மகிழ்வுடன் நன்றி கூறும் நன்நாளே பொங்கல் திருவிழாவாகவும்அறுவடை திருவிழாவாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது.

    பிறருக்கு உணவு வழங்கிய பின்னரேதான் உண்ண நினைக்கும் விவசாயிகளின் உழவுத்தொழிலேஉலகில் உள்ள மற்ற தொழில்களைவிட மிகவும் மேன்மையானதாகும்தமிழர்களின் வீரம்நாகரீகம்பண்பாடு ஆகியவற்றை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் திருவிழாவாகவும் இப்பொங்கல் விழா அமைந்துள்ளது. 

    தற்சமயம் விவசாயிகளை வாட்டிக்கொண்டிருக்கும் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்அதற்கான நிரந்தர வழிமுறைகளை நாம் உருவாக்கவேண்டும்.மேலும்தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்தசட்டம் குறுக்கே நுழைந்து தடுக்கின்றது.இதுபோன்ற தற்காலிக தடைகள் எல்லாம் நீங்கிதமிழர்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் விரைவில் உருவாகும் என்கிற நம்பிக்கையுடன்,உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும்குறிப்பாக இந்திய ஜனநாயகக் கட்சியின் அன்பு தோழர்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்