• அரசியலில் நட்புணர்வும் – நிர்வாகத்தில் நேர்மையும் தழைத்தோங்க புதிய அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி அவர்கள் எப்படி தவிர்க்க முடியாத தலைவராக விளங்கினாரோ, அதே வகையில் கடந்த 30 ஆண்டுகளாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும் தவிர்க்க முடியாத தலைவராக வளர்ந்து வருகின்றார்.சட்டமன்ற உறுப்பினர் – சென்னை மாநகர மேயர் – அமைச்சர் – துணைமுதல்வர் என பல்வேறு ஆட்சி பொறுப்புகளை ஏற்று – தன் உழைப்பாலும், திறமையாலும் இந்த அளவிற்கு முதன்மை பெற்றுள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும் உண்மையாக உழைக்கும் ஒரு தொண்டனால் தலைமை பொறுப்பிற்கு வரமுடியும் என்பதற்கு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றார்.

    தி.மு.கழகத்தில் 1970ல் அவர் உறுப்பினராக இணைந்து, 1980-ம் ஆண்டில் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக பதவிபெற்று, பின்னர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், இன்று - செயல்தலைவர் என்கிற அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இப்பொறுப்புகள் அனைத்திலும் அவரின் உழைப்பும். அர்ப்பணிப்பு உணர்வும் ஒன்று கலந்திருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    தமிழக அரசியிலில் அரிதாகப் போய்விட்ட நட்புணர்வும், நிர்வாகத்தில் நேர்மையும் மீண்டும் தழைத்தோங்க வேண்டும். அதற்கு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் பொறுப்பினை பயன்படுத்தி புதியதொரு அரசியில் பாதையை உருவாக்க வேண்டும் எனக்கூறி, என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.