• உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    மாநில அரசு நிர்வாகத்தில் மக்களின் கருத்துக்களை – தேவைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளாட்சிமன்ற அமைப்பின் நிர்வாகிகளுக்கே உள்ளதுநாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றாலும்அவர்களின் செயல்பாடுகள் நிர்வாக ரீதியிலானது அல்லஆனால்உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள்சம்மந்தப்பட்ட பகுதிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களே நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அதிகாரம் வாய்ந்த அமைப்பாக உள்ளாட்சி மன்றங்கள் இருக்கின்றன.

    குறிப்பாக, பஞ்சாயத் ராஜ்’ ‘நகர்பாலிகா சட்டங்கள் இயற்றப்பட்ட பின் உள்ளாட்சி மன்றங்களின் அதிகார  வரம்புகளும்அவைகளுக்கான செயல்பாடுகளும் மிகவும் சுதந்திரமாக்கப்பட்டனகுடிநீர்சாலை வசதிமின் இணைப்புமருத்துவமனைகள்பள்ளிக்கூடங்கள்குழந்தைகள் காப்பகங்கள்,நில உரிமைச் சான்றுவீட்டு மனை அனுமதி போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் உள்ளாட்சி மன்றங்களின் வழிகாட்டலின் பேரிலேயே நடக்கின்றன.

    உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது.  இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் அடிப்படையில்இத்தேர்தலை தள்ளிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுஇதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை உள்ளாட்சி அமைப்புக்களை நிர்வகிக்கதனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றியதுஅதன்படி தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்  மாநகரநகரபேரூர்ஊராட்சி அமைப்புக்கள் கொண்டுவரப்பட்டன

    எனினும்கடந்த டிசம்பருக்குள் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியவில்லைஅதனால்தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்துஅதாவது வரும் ஜுன் மாதம் 30-ம் தேதிவரை நீட்டித்துதமிழக அரசு மீண்டும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

    இந்த அறிவிப்பினை தொடர்ந்துஉள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான நடைமுறைகளை விரைவுபடுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லைஅசாதாரணமான நிலைகளின்போது மட்டுமே தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி மன்றங்கள் இருக்கவேண்டும்மக்கள் ஆட்சியின் வேராக விளங்கும் இவ்வமைப்புகள்தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வழிகாட்டுதலிலேயே செயல்படவேண்டும் என்பதுகிராம ராஜ்ஜியம்கு றித்து மகாத்மா காந்தியடிகளின் கருத்தாகும்எனவேகாலதாமதம் காட்டாமல்மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.