• அனைத்து தரப்பு மக்களின் தேவைகளும் நிறைவேறும் ஆண்டாக 2017 அமையட்டும் - டாக்டர் பாரிவேந்தர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

    கடந்த ஆண்டு இறுதியில் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணம்வர்தா புயல் ஏற்படுத்திய பேரிழப்புபருவமழை பொய்த்ததனால் விவசாயிகள் தொடர் மரணம் ஆகியவை மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது.

    பிறக்கும் இந்த 2017-ம் ஆண்டானது மக்களின் துன்பங்களை நீக்கிஅவர்களின் தேவைகளை நிறைவேற்றிஅனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெருகிநாட்டிலுள்ள அனைத்து துறைகளும் வளர்ச்சிபெற்று இந்தியாவை வல்லரசாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் எனக்கூறிபத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் – கட்சி நிர்வாகிகள் – தொண்டர்கள் – பொதுமக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.