• கைவிடப்பட்ட அனைத்து உயிர்களுக்காகவும் மனமிறங்கிய மனிதகுல கருணையாளர் ஏசுபிரான் - டாக்டர் பாரிவேந்தர் கிருஸ்துமஸ் வாழ்த்து

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்று போதித்த தேவகுமாரன் ஏசுநாதர் இம்மண்ணில் அவதரித்த நாளை கிருஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றோம்.கைவிடப்பட்ட அனைத்து உயிர்களுக்காகவும் மனமிறங்கி அவற்றை அரவணைத்து எல்லா உயிர்களையும் நேசிப்போம் என்ற அறிவுரையை வழங்கிய மனிதகுல  கருணையாளர் ஏசுபிரான்.  “கேளுங்கள் கொடுக்கப்படும் – தட்டுங்கள் திறக்கப்படும்” எனக்கூறி இந்த உலகத்தை காக்கதன்னையே அர்ப்பணித்த தியாகத்தின் திருவுருவமான ஏசுபிரானின் போதனைகளை மனதிற்கொள்வோம்அனைவரின் வாழ்விலும் அன்பு பெருகி –ஆனந்தம் தழுவி – மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் எனக்கூறி,உலகெங்கும் வாழும் கிருஸ்துவ சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.