• நபிகள் நாயகத்தின் அருட்போதனைகள் உலக மனித சமுதாயத்திற்கான மாமருந்து - டாக்டர் பாரிவேந்தர் மிலாது நபி திருநாள் வாழ்த்து

    இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் “மிலாதுநபி” திருநாளாக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    எளியோரிடத்தில் கருணை – சிந்தனையில் தூய்மை போன்றவற்றுடன், சமுதாயத்தில் சாந்தியும் – சமாதானமும் – சகோதரத்துவமும் நிலவி, மானுடத்தில் மனித நேயம் தழைத்து  உலகம் செழிக்க வேண்டும் என்பது அண்ணல் நபிகள் இவ்வுலகிற்கு நல்கிய அருட்போதனையாகும். அவையே இம்மண்ணில் வாழும் மனித குலத்திற்கு மாமருந்தாகும்.

    அன்பு – கருணை – ஈகை ஆகியவை சொர்க்கத்தின் திறவுகோல் என்றுரைத்த இறைத்தூதர் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிறந்த இப்பொன்னாளில், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இனிய மிலாதுநபி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.