• “தமிழகத்தின் போர்க்குரலாக விளங்கியவர் ஜெயலலிதா” - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அறிவியல் வளர்ச்சியும், மருத்துவத்துறையின் பல்வேறு சாதனைகளும் நிகழ்ந்து வரும் இக்காலத்தில், 68 வயதில் மரணம் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். தனக்கென சொந்த முறையில் குடும்பம் இல்லையெனினும், தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராக – ‘அம்மா’ என்கிற இடத்தில் இருந்து அன்பை பகிர்ந்துகொண்டவர் அவர். 

    தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் சமரசம் செய்துகொள்ளாத போர்க்குரலாக விளங்கிய மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் சாதனைகளும், மக்கள் நலத்திட்டங்களும் அவரின் புகழை என்றும் நிலைத்திருக்கச்செய்யும். மாண்புமிகு ஜெயலலிதா அவர்களை இழந்து வாடும் அ இ அ தி மு க தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் - இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.