• பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் செலாவனியை நிறுத்தியது கருப்பு பணத்திற்கு எதிரான போர் - பிரதமரின் அறிவிப்பிற்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாகவும் – அமைதியை குலைக்கும் தீவிரவாதத்திற்கு துணையாக உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் தீவிர முயற்சியை கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்து வந்தது.

    இதன் தொடர்ச்சியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் செலாவனியை நிறுத்தியது கருப்பு பணத்திற்கு எதிரான போராகும்தற்போது நாடு முழுவதும் புழகத்திலுள்ள500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 13 லட்சம் கோடி என கூறப்படுகின்றதுஇதன் மூலம் சட்டத்திற்கு புறம்பான கருப்பு பண தேக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    வல்லரசு தேசத்தை உருவாக்கும் நோக்கிலும் – பண சுழற்சியை அதிகப்படுத்தவும் நாட்டில் லஞ்சம் – ஊழல் மற்றும் தீவிரவாதத்தினை ஊக்குவிக்கும் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையினை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கப்படுகின்றது.