• கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெரும் வகையில் அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

  இந்தியா  முழுவதும் பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் டிசம்பர் தொடங்கிஅடுத்தாண்டு நவம்பர் வரை நாடு முழுவதுமுள்ள 560 சர்க்கரை ஆலைகளிலிருந்து ஏறக்குறைய 281 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்ய தீர்மானித்துள்ளது.

  சாக்ரோமைசிஸ் செர்வோசியா எனும் ஈஸ்ட் கரும்பு சாற்றுடன் கலந்து நொதித்தலுக்கு பிறகு கிடைப்பது எரி சாராயமாகும்இதனை மேலும் சுத்தப்படுத்தினால் எத்தனால் எனப்படும் காற்று மாசுபடாத எரிபொருள் கிடைக்கும்.

  தமிழ்நாட்டில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் உட்பட 46சர்க்கரை ஆலைகள் உள்ளனஇவற்றில் வெறும் 8 சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே எத்தனால் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதுஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் முழு அளவில் எத்தனாலை உற்பத்தி செய்தால் ஏறக்குறைய 50 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யமுடியும்.

  இவற்றில் லிட்டர் எத்தனாலை ரூ.40-க்கு விற்பனை செய்தால்கூட ரூபாய் 2000 கோடி வருவாயை ஈட்ட முடியும்இதன்மூலம்  விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரக்கூடிய ஏறக்குறைய 1100 கோடி நிலுவைத் தொகையை எளிதில் வழங்க முடியும்.

  உலகளவில் பிரேசில் மக்காச்சோளத்திலிருந்தும் –அமெரிக்கா கரும்பிலிருந்தும் எத்தனாலை எடுத்துஏறக்குறைய 90சதவீதம் அளவிற்கு மாற்று எரிபொருளாக பயன்படுத்தும்போது,தட்பவெப்ப நிலைக்கு உகந்த  நாடான இந்தியாவில் உள்ள வளங்களை வைத்து எத்தனாலை அதிகளவில் உற்பத்தி செய்முடியும்.

  குறிப்பாக தமிழகத்திலுள்ள இயற்கை சூழ்நிலையால் ஆண்டிற்கு சுமார் லட்சம் ஏக்கரில், 2.50 கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறதுஇதன்மூலம் பல யிரம் கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யமுடியும்.

  மது ஆலைகளுக்கு கிடைக்கும் மொலாசிஸை மட்டுமே கருத்தில் கொள்ளாமல்சர்க்கரை உற்பத்தியின்போது மீதமுள்ள கரும்பு கழிவிலிருந்து அதிக விலைமதிப்புள்ள எரிதிரவமான எத்தனாலை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்குவதுடன் மாற்று எரிபொருளை ஊக்குவிக்க சர்க்கரை ஆலைகளின் மூலம், எத்தனாலை அதிகளவில் உற்பத்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.