• மத்திய அரசின் திட்டங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்த்த பாஜக தேசிய தலைவர் திரு.அமித்ஷா அவர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் பிறந்த நாள் வாழ்த்து

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக  2-வது முறையாக பொறுப்பேற்று கட்சியின் வளர்ச்சிக்கும் – நாட்டின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டு வருபவர் திரு.அமித்ஷா அவர்கள்.

    பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் செயல்களுக்கு பக்கபலமாகவும் - ஊக்கமாகவும் திகழ்வதுடன், மத்திய அரசின் திட்டங்களை நாடு முழுவதும் எடுத்துச் சென்று பொதுமக்களிடம் சேர்த்த பெருமை திரு.அமித்ஷா அவர்களைச் சாரும்.

    ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அரசியல் மற்றும்  பொதுவாழ்க்கையில் திறம்பட செயலாற்றி வரும் திரு.அமித்ஷா அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, நீண்ட ஆயுளுடனும் – திடமான நம்பிக்கையுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது உளம்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.