• தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான ஐ.ஜே.கே பொறுப்பாளர்கள் நியமனம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

  அடுத்த மாதம் (அக்டோபர்) 17,19, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட உள்ளது. இதற்காக ஆங்காங்கே உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர  நிர்வாகிகள் முழுவீச்சுடன் பணியாற்றி வருகின்றனர்.

  எந்தெந்த பொறுப்புகளுக்கு, யார் யார் வேட்பார்கள் என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளே முடிவெடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியினை செவ்வனே செய்து வருகின்றனர். இப்பணியினை ஒருங்கிணைக்கவும், வாக்கு சேகரித்தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை முறைப்படுத்தவும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. பி. ஜெயசீலன் அவர்களின் ஆலோசனையின் பேரில், தேர்தல் பணியினை மேற்கொள்ளவேண்டும். இப்பணியினை மேற்கொள்ளவிருக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் விவரம் வருமாறு :

  திரு. பி. ஜெயசீலன் – பொதுச்செயலாளர் (தமிழக உள்ளாட்சித் தேர்தல்  மாநில பொறுப்பாளர்)

  திரு. எம்.எஸ். ராஜேந்திரன் -  கொள்கை பரப்புச் செயலாளர் (தமிழக உள்ளாட்சித் தேர்தல்  மாநில ஒருங்கிணைப்பாளர்)

  திரு. எஸ். ஆரோக்கியம் – தேர்தல் பணிக்குழு செயலாளர் (வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணி சட்டஆலோசகர்)

   

  வ. எண்

  மாநில நிர்வாகிகள் பெயர் (திருவாளர்/ திருமதி)

  மாநில பொறுப்பு

  தேர்தல் பணியாற்ற உள்ள மாவட்டம்

  1

  S.S. வெங்கடேசன்

  முதன்மை அமைப்புச் செயலாளர்

  விழுப்புரம், திருவண்ணாமலை

  2

  A.K.T. வரதராஜன்

  அமைப்புச் செயலாளர்

  சேலம், பெரம்பலூர்

  3

  வே. பாலு

  செய்தி தொடர்பாளர்

  சென்னை

  4

  நெல்லை. G. ஜீவா

  துணைப் பொதுச்செயலாளர்

  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி

  5

  R. ஆனந்தப்பிரியா

  துணைப் பொதுச்செயலாளர்

  திருவள்ளூர்

  6

  P. அன்புதுரை

  வழக்கறிஞர் அணி செயலாளர்

  திருச்சி, தஞ்சை

  7

  சேலம் R. லட்சுமணன்

  பிற மாநில அமைப்புச் செயலாளர்

  கடலூர்,

  8

  அமுதா ராஜேஸ்வரன்

  மகளிர் அணி செயலாளர்

  தர்மபுரி, கிருஷ்ணகிரி

  9

  K.C.T. மனோகரன்

  வர்த்தகர் அணி செயலாளர்

  நாகை, திருவாரூர், அரியலூர்

  10

  சி. குழந்தைசாமி

  அமைப்புச்செயலாளர்

  சிவகங்கை, ராமநாதபுரம்

  11

  K.R. பாலாஜி

  வழக்கறிஞர் அணி துணை செயலாளர்

  வேலூர்

  12

  S.R. ஜவஹர்

  ‘பார்க்கவன் குரல்’ வளர்ச்சி குழு தலைவர்

  நாமக்கல், ஈரோடு

  13

  G. சண்முகநாதன்

  மாநில துணைத் தலைவர்

  கோவை, திருப்பூர்

  14

  S. சக்திவேல்

  பா.மு.ச. மாவட்டத் தலைவர்

  கரூர்

  15

  ஆதி.நெடுஞ்செழியன்

  தலைமைநிலைய அமைப்புச்செயலாளர்

  புதுக்கோட்டை

  16

  L. குருபிரசாந்த்

  மாணவர் அணி செயலாளர்

  விருதுநகர்

  17

  S. முத்தமிழ்செல்வன்

  மாவட்டத் தலைவர்

  காஞ்சிபுரம்

  18

  R. முருகானந்தம்

  மண்டல துணைத் தலைவர்

  மதுரை,திண்டுக்கல்

  19

  A.K.M. செந்தில்குமார்

  மாவட்டத் தலைவர்

  தேனி

  20

  துரை.N. பாண்டியன்

  மாவட்டத் தலைவர்

  தூத்துக்குடி

   

  நடைபெற உள்ள இந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முழுஒத்துழைப்பை அளித்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.