• அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியை குறைத்தவர் பிரதமர் நரேந்திரமோடி - பிரதமருக்கு டாக்டர் பாரிவேந்தர் பிறந்த நாள் வாழ்த்து

    இந்தியா என்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மாநில முதல்வரிலிருந்து, நாட்டின் பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் திரு நரேந்திமோடி அவர்கள்.

    பன்முகம் கொண்ட இந்தியாவில் – நாம் யாவரும் உணர்வால் இந்தியர்களே என்பதினை வலியுறுத்தும் நோக்கில்“ஒரே தேசம் – ஒரே பார்வை” என்பதை தாங்கி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையில் மான் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுவது அரசுக்கும் – நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதுடன் இதுவரை எந்த பிரதமரும் செய்திராத செயலாகும். அவரின் இச்செயல்பாடுகள் நாட்டுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தனது வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களையும், சூழ்ச்சிகளையும் சந்தித்து அதனை வென்றெடுத்து வீர நடைபோட்டு இன்று தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.நரேந்திரமோடி அவர்கள், தன் வாழ்வில் மேலும் பல்வேறு சாதனைகள் படைத்து இந்தியாவை வல்லரசுப் பாதையில் வழிநடத்த வேண்டும் எனக்கூறி, இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.