• பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ திருவிழாக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டாக்டர் பாரிவேந்தர் ஓணம் வாழ்த்து

    கேரள மாநிலத்தின் அறுவடை திருநாள், மலையாள மொழிபேசும் மக்களால் ஓணம் பண்டிகையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றது. கேரளத்தை ஆண்ட மகாபலி சக்ரவர்த்தி ஆண்டிற்கு ஒரு முறை தம் நாட்டை காண வருவார் என்றும், அப்போது தங்களுடைய இல்லத்திற்கும் வருவார் எனக்கருதி, மிகுந்த நம்பிக்கையுடன் அவரை வரவேற்க தங்கள் இல்லத்தினை அழகுபடுத்தி – வாசலில் அத்தப்பூ கோலம் போட்டு வரவேற்று மகிழும் நாளிது.

    இந்நாளில் ஆணவம் – பசி – பிணி – பகையுணர்வு ஆகியன முற்றிலும் நீங்கி அன்பு – அமைதி – மனிதநேயம் செழித்தோங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

    மேலும், பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து இந்தியன் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ இதுபோன்ற திருவிழாக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த திருஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.