• “துரோகத்தையும் விரோதத்தையும் முறியடிப்போம்“ – இந்திய ஜனநாயகக் கட்சி தலைமையகம் அறிக்கை

    விரோதிகளாலும் நம்பிக்கைத் துரோகிகளாலும் எஸ்.ஆர்.எம் குழுமத்துக்கும் – நமது தலைவர் டாக்டர் பாரிவேந்தருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சியின் பிடியில் சிக்கியிருக்கின்றோம்.

    வாழ்வில் எத்தனையோ பேரை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நம்புகின்றார். அவர்களுடைய முன்னேற்றத்துக்காக உதவியுள்ளார், உதவியும் கொண்டிருக்கிறார். ஆனால், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து, ஏமாற்றும் துரோகிகளால் ஏற்படும் வலி அளவிட முடியாதது.

    இந்தச் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து, உண்மையை உலகுக்கு நிரூபித்து, அப்பழுக்கற்றவர் என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்து டாக்டர் பாரிவேந்தர் மீண்டு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    காணாமல் போன மதனைப் போன்ற துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்து, தங்கள் விருப்பத்துக்குப் பணியாதவர்களைக் களங்கப்படுத்த முயலும் சில ஊடகங்களின் மலிவான பிரச்சாரத்தையும் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் முறியடிப்பார்.

    சட்டத்தின் துணையுடன் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, மீண்டும் கட்சிப் பணிகளையும் - கல்விப் பணிகளையும் தொடர்ந்து நடத்தி வெற்றி பெறுவார். “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்” என்பதை உணர்ந்து உரைக்கும் இச்செய்தியைக் குன்றின் மேலிருந்து தெரிவித்துக்கொள்கின்றோம்.